1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (18:31 IST)

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை காவல்; சென்னை நீதிமன்றம் உத்தரவு..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை நீதிமன்ற காவல் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை செய்யலாம் என இன்று காலை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இருகுறித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 
 
இந்த மனு சற்று முன்னர் விசாரணைக்கு வந்த நிலையில் ஆகஸ்ட் 12 வரை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.  
 
இந்த நிலையில் இன்று முதல் ஐந்து நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் என்னென்ன விசாரணை நடக்கும் என்பதை வரும் நாளில் பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva