வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2017 (12:38 IST)

தீபாவளி பண்டிகை ; எந்த ஊர் செல்ல எங்கு பஸ் ஏற வேண்டும்?

வருகிற 18ம் தேதி தீபாவளி வருவதையொட்டி, போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் 5 இடங்களிலிருந்து வெளியூர் செல்ல பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது.


 

 
வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழக அரசு சார்பில் மொத்தம் 11 ஆயிரத்து 645 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட உள்ளன.
 
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தின் வெளிப்பகுதி:
 
வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்
 
அண்ணாநகர் மேற்கு பணிமனை பஸ் நிறுத்தம்:
 
ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அனைத்தும் இங்கிருந்து இயக்கப்படும்.
 
பூந்தமல்லி பேருந்து நிலையம்:
 
ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர்
 
தாம்பரம் சானட்டோரியம் பேருந்து நிலையம் :
 
திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அதை தாண்டி செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படும்.
 
சைதாப்பேட்டை மாநகரப் பேருந்து பணிமனை:
 
கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
 
அதேபோல், கோயம்பேட்டில் மட்டும் 26 முன்பதிவு செய்வதற்கான கவுண்டர்களும் திறக்கப்பட்டுள்ளது. மேலும், பூந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் சானட்டோரியம் ஆகிய பேருந்து நிலையங்களிலும் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.