செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (16:16 IST)

அசிங்கமா இல்ல.. சிவன் உங்கள சும்மா விடமாட்டார்! – சீமானை வெளுத்த விஜயலட்சுமி!

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வந்த சீமான் குறித்து விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா கடந்த 5ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து பல பிரபலங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று சிவனை வணங்கி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பெரிய கோவில் சென்று சிவனை வழிப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சீமானின் சிவ வழிபாடு குறித்து கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி. அந்த வீடியோவில் அவர் ”ஆரம்பக்கட்டத்தில் பெரியாரிய ஆதரவாளராக இருந்த சீமான் மேடை பேச்சுகளில் சிவனை மிகவும் ஏளனமாக பேசினார். வாழ்த்துகள் படத்தின் படப்பிடிப்பில் கூட சிவனை வழிப்பட்டு திருநீறு பூசியதற்காக “காலையிலேயே பட்டையா” என கிண்டலாக கேட்டு சிரிப்பார். இன்று அவர் சிவன் கோவிலில் சென்று வழிபாடு செய்கிறார். இவரை போன்ற பாவிகளை சிவன் சும்மா விடமாட்டார்” என பேசியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக சீமான் மீது விஜயலட்சுமி வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.