செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (17:45 IST)

முடிந்தது பாலமேடு ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய காளையருக்கு கார் பரிசு

18 காளைகளை அடக்கிய காளையருக்கு கார் பரிசு
உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு சற்றுமுன்னர் முடிவடைந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரையைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு வீரர் ஒருவருக்கு கார் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது 
 
இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் மொத்தம் 674 காளைகள் களம் கண்டன. இதில் 18 காளைகளை அடக்கிய மதுரையைச் சேர்ந்த கார்த்தி என்பவருக்கு முதல் பரிசாக கார் ஒன்று பரிசளிக்கப்பட்டது
 
இதனை அடுத்து 17 மாடுகளை அடக்கிய பிரபாகரன் என்பவர் இரண்டாம் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஏராளமான காளைகள் காளையர்கள் அடக்க துணிவுடன் முயற்சித்தனர் என்பதும் இதை பார்க்கும் பார்வையாளர்களுக்கு திரில்லாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஒவ்வொரு மாடும் வாடிவாசலில் இருந்து சீறி வந்த போது அவர்கள் அந்த காளையை அடக்க காளையர்கள் முயற்சித்தது கண்கொள்ளா காட்சியாக அனைவரையும் அசத்தியது என்பது குறிப்பிடத்தக்கது