வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 25 மார்ச் 2023 (09:54 IST)

பட்டாசு வெடி விபத்து: பலியானவருக்கு ரூ 25.லட்சம் வழங்க வேண்டும்- கிருஷ்ணசாமி.

"காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 14 பேர் மிகுந்த ஆபத்தான நிலையிலும், பலர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். 
 
ஓரிக்கை கிராம பட்டாசு ஆலை விபத்தில் இறந்த ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ 3 லட்சத்தை ரூ 25 லட்சமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். காயம்பட்டோருக்கு உயர் சிகிச்சையும், உடல் உறுப்புகளை இழந்தோருக்குத் தகுந்த நிவாரணமும் வழங்க வேண்டும்.
 
அதேபோல இந்த நிவாரணத் தொகையுடன் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும், காயம்பட்ட - உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கும் வாழ்நாள்  முழுவதும் ரூ 5000 முதல் ரூ 10000 வரை  மாதாந்திர உதவித் தொகை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.