1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (08:17 IST)

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை - காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார்.இதற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார்.
 
அந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலயம் தேவ சிலை அருகே காங்கிரஸ் கட்சி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர் ரவிட்டத்திரன், கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர் ஜீவன்மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.