அரசு பேருந்து பணிமனையில் தீ விபத்து.. 4 பேருந்துகள் சேதம்..!
கடலூரில் அரசு பேருந்து பணிமனையில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து 4 பேருந்துகள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலாவதி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 4 பேருந்துகள் எரிந்தன
15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில் ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது
பகல் நேரங்களில் இந்த பணி நடைபெற்று வந்த நிலையில் அதிகாலை ஒரு பேருந்தில் திடீரென தீப்பற்றியதை அடுத்து அடுத்தடுத்த பேருந்துகளிலும் தீ பரவியது. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Edited by Siva