வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 29 பிப்ரவரி 2020 (19:01 IST)

ரசாயன கிடங்கில் தீ விபத்து : மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் - டிஜிபி

ரசாயன கிடங்கில் தீ விபத்து : மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் டிஜிபி ...

சென்னை மாதவரத்தில் உள்ள ரசாயன கிடங்கில் தீ ஏற்பட்டுள்ளதால் ரசாயன  கிடங்கு உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 
 
மருத்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்துச் சிதறுவதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்திவருகின்றனர்.
 
கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசம் அடைந்துள்ளன.
 
தீயை அணைக்க 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முகக் கவசம் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு,  வீரர்களுக்கு ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை மாநகர காவல் ஆணையர்கள் சம்பவம் குறித்து  நேரில் ஆய்வு செய்து வருகிறார். 3 மணிநேரத்திற்கு மேலாக எரிந்து வரும் தீயை அணைக்க வீரர்கள் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி கூறியுள்ளார்.