புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2019 (12:11 IST)

ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்தால் அபராதம்: அதிரடி அறிவிப்பு

ஊட்டி மலை ரயில் தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்தால் அபராதம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஊட்டிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் பலர் வருகை தருகிறார்கள். சிலர் நூற்றாண்டு பழமையான மலை ரயிலில் பயணம் செய்கிறார்கள். அப்போது ரயிலில் செல்லும் பயணிகள் சிலர், புள்வெளிகளோ, அருவிகளோ, பாலங்களோ, குகைகளோ வரும்போது ரயிலில் தொங்கியபடியே செல்ஃபி எடுக்கிறார்கள்.

சிலர் மலைப் பாதையில் ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்துக்கொண்டும் செல்ஃபி எடுக்கிறார்கள். இந்த ஆபத்தான போக்கினை தடுப்பதற்கு தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதன் படி, தண்டவாளத்தில் செல்ஃபி எடுத்தால் ரூ.2000 அபராதம் எனவும், ரயில் வரும்போது தண்டவாளத்தை கடந்தால் ரூ.1000 அபராதம் எனவும் அறிவித்துள்ளது. மேலும் டிக்கெட் இன்றி பிளாட்ஃபாரத்தில் நின்றால் 1000 ரூபாயும், தண்டவாளத்தில் குப்பையை போட்டால் 200 ரூபாயும், அசுத்தம் செய்தால் 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இதற்கான அறிவிப்பு பிரசுரங்கள், ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.