வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (10:25 IST)

படியில் அமர்ந்தால் 30 ஆயிரம் அபராதம்: அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்

இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தால் 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

இத்தாலியின் தலைநகரான ரோம் ஆயிர ஆண்டுகால பழமையின் குறியீடாக திகழ்கிறது. ரோம சாம்ராஜ்ஜியத்து கட்டிடங்கள், தேவாலயங்கள் இங்கு மிகவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் இவற்றை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

ரோம் நகரின் சிறப்பு வாய்ந்த ஒரு வரலாற்று சின்னம் ஸ்பானிஷ் படிக்கட்டுகள். 174 படிகளை கொண்ட இதன் உச்சியில் டிரினிட்டா டி மாண்டி தேவாலயம் உள்ளது. இந்த படிகள் பழங்கால கட்டிடக்கலை வல்லுனர் ப்ரான்செஸ்கோ டி சாங்டிஸ் என்பவரால் 1726ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.

 ஸ்பானிஷ் படிக்கட்டுகளில் சுற்றுலா பயணிகள் அமர்வதும், செல்பி எடுப்பதுமாக அதை சிதைத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. தங்களது வரலாற்று சின்னத்தை சுற்றுலா பயணிகளிடமிருந்து காக்க ரோம் அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி ஸ்பானிஷ் படிக்கட்டுகளில் குழுவாக அமர்பவர்கள், செல்பி எடுக்க முயல்பவர்களை அங்கு உள்ள காவல் அதிகாரிகள் எச்சரிப்பார்கள். அதையும் மீறி அமர்ந்தால், செல்பி எடுத்தால் விதிகளை மீறியதற்காக அவர்களுக்கு 400 யூரோ (ரூபாய் மதிப்பில் 30 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும்.