1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (15:03 IST)

பள்ளிக்கு செல்லாமல் இளைஞனுடன் ஊர் சுற்றிய மகள்: தந்தை செய்த கொடூர செயல்!

love
பள்ளிக்கு  செல்லாமல் இளைஞனுடன் ஊர் சுற்றிய மகளை அவரது தந்தை செய்த கொடூர செயல் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே அர்ஜுன் என்பவரின் மகள் அர்ச்சனா பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு கொள்ளாமல் அந்த பகுதியில் உள்ள இளைஞர் ஒருவருடன் ஊர் சுற்றுவதாக தெரிகிறது
 
இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன் மகள் அர்ச்சனாவைப் கண்டித்தார். ஆனாலும் அவர் திருந்தவில்லை .இதனை அடுத்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை மகளின் வாயில் ஊற்றியதாக தெரிகிறது. தற்போது ஆபத்தான நிலையில் அர்ச்சனா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன