திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 ஏப்ரல் 2022 (17:03 IST)

மது அருந்த அனுமதி மறுப்பு....ஹோட்டல் கேட் மீது காரை ஏற்றிய இளைஞர்!

வயது குறைவாக இருப்பதால்  இளைஞரை ஹோட்டர் ஊழியர்கள் மது அருத்த அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் இருப்பு கேட்டை காரர் இடித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டில் கத்திப்பாராவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு  இளைஞர் காரில் வந்தார்.

அங்குள்ள மதுபான பாரிற்கு அவர் சென்றபோது, அவருக்கு வயது குறைவாக இருப்பதாகக் கூறி ஹோட்டர் ஊழியர்கள் அவரை உள்ளே அப்னுமதிக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த  இளைஞர் காரை எடுத்து வெளியே வந்து அங்குள்ள இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு சாலையின்  நடுவே காரை நிறுத்தினார்.  பின்னர் சம்பவ  இடத்திற்கு வந்த போலீஸார் ஆகாஷ் (19) என்ற இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.