1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 18 ஜூலை 2024 (13:59 IST)

அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தை.. பிறந்து 9 நாள் ஆன குழந்தையை கொன்ற தந்தை..!

அடுத்தடுத்து பெண் குழந்தை பிறந்ததை அடுத்து பிறந்து ஒன்பது நாள் ஆன பெண் குழந்தையை அந்த குழந்தையின் தந்தையே கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெண் குழந்தை தான் பெற்றோர்களை பிற்காலத்தில் காப்பாற்றுவார்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது கூட பெண் குழந்தைகள் வேண்டாம் என்று எண்ணும் பெற்றோர்கள் இருக்கின்றனர். 
 
ஆண் குழந்தை பிறந்தால் மட்டுமே பெருமை என்றும் பெண் குழந்தை பிறந்தால் இழிவு என்று ஒரு சிலர் நினைப்பதால் பெண் குழந்தை பிறந்தவுடன் கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விடுகின்றனர். ஆனால் பெண்கள் தற்போது தான் வாழ்க்கையில் முன்னேறி ஆண்களுக்கு இணையாகவும் ஆண்களை விட அதிகமாகவும் சம்பாதித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சென்னை வியாசர்பாடி பகுதியில் பிறந்து ஒன்பது நாட்களே ஆன பெண் குழந்தையை கத்திரிக்கோலால் வயிற்றில் குத்தி கொலை செய்த தந்தையை காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
முதல் கட்ட விசாரணையில் அடுத்தடுத்து தனக்கு பெண் குழந்தை பிறந்ததால் ஏற்பட்ட விரக்தியில் ஒன்பது நாள் குழந்தையை குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் சென்னை வியாசர்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran