செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (09:57 IST)

மருந்து வாங்க பணமில்லை.. பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை!

Child

பிறந்து 15 நாட்களே ஆன குழந்தைக்கு மருத்துவம் பார்க்க வசதியில்லாததால் தந்தையே புதைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் பகுதியில் வாழ்ந்து வருபவர் தாயாப். இவருக்கு திருமணமான நிலையில் சமீபத்தில் இவரது மனைவி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். குழந்தை பிறந்து 15 நாட்களே ஆன நிலையில் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் குழந்தைக்கு மருத்துவம் பார்க்கும் அளவிற்கு தாயாப் கையில் பணமில்லை.

ஏழ்மையில் வாழும் தாயாப் குழந்தையை காப்பாற்ற வசதி இல்லாததால், குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார். இதனால் குழித் தோண்டி குழந்தையை உயிருடன் அதில் போட்டு புதைத்துள்ளார். இதில் குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், தாயாபையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமைக் காரணமாக பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை தந்தையே இரக்கமின்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K