1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 4 ஜூலை 2024 (09:25 IST)

14 வயது சிறுமியுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்த இளைஞர்! – சிறுமியின் தந்தை செய்த சம்பவம்!

crime

14 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்த இளைஞரை, சிறுமியின் தந்தை கூலிப்படையை ஏவிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பாண்டியன் என்பவரது மகன் புவனேஸ்வரன். இவர் திருப்பூரில் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு அப்பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மாறிய நிலையில் அடிக்கடி மாணவிடை பல இடங்களுக்கு அழைத்து சென்ற புவனேஸ்வரன், சிறுமியோடு உல்லாசமாக இருந்து அதை போட்டோ, வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

அதை தனது நண்பர்கள் சிலருக்கும் ஷேர் செய்துள்ளார். அவ்வாறாக அந்த படங்கள், வீடியோக்களை பெற்ற புவனேஸ்வரனின் நண்பன் தமிழரசன் என்பவன் அந்த வீடியோக்களை சிறுமியின் தந்தையிடமே காட்டி ரூ.15 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்நிலையத்தில் இருதரப்பையும் அழைத்து தமிழரசனை எச்சரித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
 

மறுபக்கம் புவனேஸ்வரன் தொடர்ந்து சிறுமியுடன் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை புவனேஸ்வரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக முன்னதாக தன்னிடம் ரூ..15 ஆயிரம் கேட்டு மிரட்டிய தமிழரசனை தொடர்பு கொண்டு கூடுதல் பணம் அளிப்பதாக சொல்லி புவனேஸ்வரனை கொலை செய்ய சொல்லியுள்ளார்.

தமிழரசனும் புவனேஸ்வரனை மது அருந்த செல்லலாம் என கூட்டி சென்று கூலிப்படையை வைத்து கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் புவனேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன், தலைமறைவான சிறுமியின் தந்தை, தமிழரன் மற்றும் கூலிப்படை ஆட்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K