தூத்துக்குடியில் விவசாயிகள் ஸ்டெர்லைட் போராட்டம்: மீண்டும் வெடிக்கும் சூழல்!
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என மத்திய அரசு கூறியதை அடுத்து தமிழக அரசு முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. பின்னர் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை செய்ய இன்று காலை அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.
திமுக உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் இதில் கலந்து கொண்ட நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும், மத்திய அரசு வேதாந்தாவிற்கு துணை போக கூடாது, உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.