திங்கள், 3 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 மார்ச் 2025 (10:23 IST)

அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். கமல்ஹாசன்

Kamal
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்பட பல அரசியல் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது உலகநாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அச்சமும் பதட்டமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்கொள்ளுங்கள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து பதிவில் கூறியிருப்பதாவது:

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களே, எவ்வித அச்சமும், பதற்றமும் இல்லாமல், துணிச்சலுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்.

உயர்கல்விக்கு செல்வோர் எண்ணிக்கை  இந்திய மாநிலங்களிலேயே அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. அந்தப் பெருமையை உயர வைப்பதில் உங்கள் பங்கும் உள்ளது.

அருமையாகத் தயாராகியிருப்பீர்கள். உங்கள் உழைப்பின் பலனை அறுவடை செய்யும் காலம் இது. தேர்வை சிறப்பாகச் செய்வதில் மட்டுமே உங்கள் முழுக் கவனமும் இருக்கட்டும்.  முடிவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.  

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.

Edited by Mahendran