வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (09:33 IST)

இன்று முதல் எக்ஸ்ட்ரா 5 டிகிரி வெயில்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

நாளை அக்கினி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் உள் மாவட்டங்கள் சிலவற்றில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோடைக்காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் பெருவாரியான மாவட்டங்களில் வெயில் படுத்தி வருகிறது. மக்கள் காலை நேரங்களிலேயே வெயிலாலும், அனல் காற்றாலும் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. சாதாரண நாட்களே இப்படி இருக்கும் நிலையில் நாளை முதல் அக்கினி நட்சத்திரம் தொடங்க உள்ளதால் மேலும் வெயில் அதிகரிக்க உள்ளது.

இந்நிலையில் இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீச உள்ளதால் தற்போது உள்ள வெப்பநிலையுடன் கூடுதலாக 5 டிகிரி வரை வெப்பம் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்பநிலை மேலும் அதிகரிக்க உள்ளது.

இதனால் பொதுமக்கள் இப்பகுதிகளில் மதிய நேரங்களில் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K