திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 3 மே 2024 (06:51 IST)

நேற்று 18 இடங்களில் சதமடித்த வெயில்.. இன்றும் வெப்ப அலை வீசும் என தகவல்..!

Summer
நேற்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவான நிலையில் இன்றும் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர் என்பதும் மதிய நேரத்தில் சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு அதிகமான வெப்பம் பதிவான நிலையில் இன்றும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

குறிப்பாக வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் மே நான்கு முதல் ஆறாம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஆனால் அதே சமயத்தில் இன்று முதல் மே 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பிருப்பதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva