செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:00 IST)

மீண்டும் கடும் ஊரடங்கு உத்தரவா...?

3 ஆம் அலைக்கான கணிக்கப்பட்ட காலமும் நெருங்குவதால் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். 
 
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தில் 1,592 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,592 பேர்களில் 165 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது. ஆம், தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய நகரங்களில் பாதிப்பு முன்பை விடவும் அதிகரித்து வருகிறது. 
 
எனவே, மூன்றாம் அலைக்கான கணிக்கப்பட்ட காலமும் நெருங்குவதால் மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.