1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (14:54 IST)

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது
 
கடந்த 2015ஆம் ஆண்டு நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மீது அப்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஊழல் குற்றம் சாட்டியிருந்தார்
 
இதனை அடுத்து எடப்பாடி பழனிசாமி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் தனியார் தொலைக்காட்சி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவதாக தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து அந்த வழக்கை ரத்து செய்யப்பட்டதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது