திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:47 IST)

இந்து முன்னணியை பார்த்து போலீசாரே அஞ்சும் நிலை..! ஒரு காலத்தில் மரியாதை இருந்தது.!! நீதிமன்றம் கருத்து..!!

Madurai Court
காவல்துறையே பார்த்து பயப்படும் அளவிற்கு இந்து முன்னணி அமைப்பு மிகவும் மோசமாகி விட்டதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை  வேதனை தெரிவித்துள்ளது.
 
உள்ளாடைகளை கழட்டிக் காட்டி, மகளிர் காவலரிடம் தகராறு செய்ததாக தஞ்சை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் கைது செய்யப்பட்டார். 
 
இந்த வழக்கில் ஜாமின் கோரிய மனுவை மீண்டும் ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, சமூகத்தில் இந்து முன்னணி என்ற ஒரு காலத்தில் மரியாதை இருந்ததாக தெரிவித்தார்.  

 
தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவிற்கு இந்து முன்னணி மோசமாகி விட்டதாகவும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.