1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (10:13 IST)

விஜய், அஜித், சூர்யா பட தயாரிப்பாளர் மறைவு.. திரையுலகினர் அஞ்சலி..!

விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்து வருகின்றனர். 
 
தமிழ் திரை உலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்தவர் மோகன் நடராஜன் என்பதும் இவர் விஜய் நடித்த கண்ணுக்குள் நிலவு, அஜித் நடித்த ஆழ்வார், சூர்யா நடித்த வேல், விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் மோகன் நடராஜன் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு நடிகர் சூர்யா உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்து உள்ளனர். தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைவு தமிழ் திரை உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran