விருப்பத்தை மீறி திருமணம் செய்த காதல் ஜோடிகள்! – நைஸாக பேசி வரவழைத்து நடத்திய கொடூரம்!
ஈரோடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை வீட்டிற்கு அழைத்து பெண் வீட்டார் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஔவையார்பாளையத்தை சேர்ந்தவர் அசோக். தனியர நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்து சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறுவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் அவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பின்னர் சௌந்தர்யாவுடன் அசோக் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சமரசமாகிய சௌந்தர்யாவின் வீட்டார் அசோக்கை குடும்பத்தோடு விருந்திற்கு அழைத்துள்ளனர். இதனால் தன் தாய் தந்தையரோடு விருந்துக்கு சென்றுள்ளார் அசோக்.
அங்கு உருட்டக்கட்டை, அரிவாள் சகிதம் அசோக் வீட்டாரை சுற்றி வளைத்த பெண்ணின் உறவினர்கள் அசோக்கின் சகோதரர்கள், தந்தை என அனைவரையும் தாக்கியுள்ளனர். சௌந்தர்யாவை மட்டும் வீட்டில் அறையில் அடைத்து வைத்துவிட்டு மற்றவர்களை அடித்து விரட்டியுள்ளனர். இதனால் பலத்த காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து அசோக் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.