ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கலா?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 10 முதல் 17 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், 8 நாட்கள் வேட்புமனு தாக்கலுக்கு அவகாசம் இருந்தாலும், இந்த எட்டு நாட்களில் மூன்று நாட்களில் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் அரசு விடுமுறை காரணமாக, ஜனவரி 10, 13,17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்றும் மற்ற ஐந்து நாட்களும் பொங்கல் விடுமுறை என்பதால் தாக்கல் செய்ய முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த மூன்று நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பதால், இந்த நேரத்திற்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், அனைத்து கட்சிகளும் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் போட்டியில்லை என்று கூறப்பட்ட நிலையில், அதிமுகவும் போட்டியிடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் மட்டுமே போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran