போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை: டாக்டர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் பாமக போட்டி இல்லை என்றும் அதே நேரத்தில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த தமிழ் மகன் ஈவேரா திடீரென காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு கிழக்கு தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டது.
இந்த நிலையில் பாஜக தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சீமான் ஆகியோர்களும் தங்களது கட்சியின் சார்பில் போட்டியாளர்களை நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாமக போட்டியிடாது என்றும் வேறு எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என்றும் பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் என்பது தேவையற்றது என்றும் மக்களின் வரிப்பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பவை என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran