திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: சனி, 21 ஜனவரி 2023 (10:50 IST)

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இவரா?

சமீபத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்புனர் திருமகன் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அதிமுக கூட்டணியில் அதிமுகவும் போட்டியிட இருக்கும் நிலையில் பாஜக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆக்ய கட்சிகள் இந்த தேர்தலில் என்ன முடிவு எடுக்க உள்ளன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்நிலையில் காங்கிரஸ் சார்பாக மறைந்த திருமகனின் சகோதரர் சஞ்சய் சம்பத் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.