வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (15:31 IST)

ஈரோடு இடைத்தேர்தலில் 5 முனை போட்டி.. பாஜக போட்டியிட்டால் 6 முனை போட்டி?

ஈரோடு இடைத்தேர்தலில் 5 முனை போட்டி.. பாஜக போட்டியிட்டால் 6 முனை போட்டி?
ஈரோடு இடைத்தேர்தலில் தற்போது ஐந்து கட்சிகள் வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில் பாஜக போட்டியிட்டால் ஆறுமுனைப் போட்டியாகும் என்று கூறப்படுகிறது. 
 
ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சியின் சார்பில் சிவப்பிரசாத் மற்றும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் தென்னரசு ஆகியோர் போட்டியிடுகின்றனர் 
 
பாஜக ஈரோடு இடைத்தேர்தல் குறித்த முடிவை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை என்பதால், அக்கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட்டால் ஆறுமுனை போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran