1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (09:58 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு..!

thennarasu
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு..!
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் வேட்பாளர் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த தமிழ் மகன் ஈவேரா காலமானதை அடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார் 
 
இந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி சற்றுமுன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் ஆக இருக்கும் தென்னரசு என்பவர்தான் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே இவர் இதே தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தீவிர பிரச்சாரம் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva