செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (18:00 IST)

நடிகர் கார்த்திக்கு சவால் விடுத்த பிரபல அரசியல் கட்சி தலைவர்!

சமீபத்தில் சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகை கொண்டாட நடிகர் கார்த்தி ஈரோடு மாவட்டம் கவுண்டம்பாளையம் சென்று காலிங்கராயன் தின விழாவில் கலந்து கொண்டார். மேலும், காலிங்கராயனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, காலிங்கராயன் வாய்காலில் முளைப்பாரி விட்டு மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய நடிகர் கார்த்தி, காலிங்கராயன் கால்வாயை பழைய பொலிவிற்கு கொண்டுவர வேண்டும் எனவும், இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
இந்த நிலையில் 2000 இளைஞர்களை திரட்டி காலிங்கராயன் கால்வாயை தூர்வார தயாராக தான் தயார் என்றும், அதற்கு நடிகர் கார்த்தி தயாரா? என்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சவால் விடுத்துள்ளார்.
 
இந்த சவாலை நடிகர் கார்த்தி ஏற்று காலிங்கராயன் கால்வாயை தூர்வார முன்வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்