செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜனவரி 2020 (09:59 IST)

கார்த்தியை அடுத்து விஜய்யுடன் மோதும் சூர்யா!

கடந்த தீபாவளியன்று விஜய் நடித்த பிகில் திரைப்படமும் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் ஒரே நாளில் வெளியாகியது. ரூபாய் 180 கோடி பட்ஜெட்டில் தயாரான பிகில் திரைப்படம் பெற்ற லாபத்தை விட ரூபாய் 27 கோடி பட்ஜெட்டில் தயாரான கைதி திரைப்படம் பெற்ற லாபம் அதிகம் என்றும், பிகில் திரைப்படத்தை விட கைதி திரைப்படம் தீபாவளி போட்டியில் வென்று விட்டது என்றும் டிரேடிங் வெளிவட்டாரத்தில் கூறப்பட்டது 
 
இந்த நிலையில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதே தேதியில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படமும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
 
ஏற்கனவே விஜய் படத்துடன் தம்பி கார்த்தி மோதிய நிலையில் தற்போது அண்ணன் சூர்யாவும் விஜய்யுடன் மோத தயாராகி வருவதால் கோலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி ஏப்ரல் 9ஆம் தேதி விஷாலின் ’சக்ரா’ திரைப்படமும் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் 
 
மாஸ்டர் திரைப்படம் ஏற்கனவே ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படும் நிலையில் எதிர்பார்த்த வசூல் கிடைக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் திரையுலகில் கூறப்படுகிறது