வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 19 செப்டம்பர் 2020 (11:41 IST)

ஓங்கிய எடப்பாடியின் கை... அதிமுக ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு!

கட்சியில் முதல்வர் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதாக எழுந்த பேச்சால் நேற்று நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மோதல் சூழல். 
 
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. திமுகவில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுகவில் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இது சம்மந்தமாக சில நாட்களாக சர்ச்சைகள் அதிமுகவில் எழுந்துள்ளன.
 
இந்நிலையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்த போது ”ஜெயலலிதாவின் அரசியல் வாரிசே” எனவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நுழைந்த போது “நிரந்த முதல்வரே” என்றும் கோஷங்கள் எழுப்பட்டது.
 
அப்போதே பிரச்சனை வரும் எதிர்பார்த்த நிலையில், அப்போது அல்லாமல் கட்சியில் முதல்வர் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இணைப்பின்போது ஒப்புக்கொண்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் கோரிய போது பிரச்சனை வெடித்துள்ளது. 
 
வழிகாட்டுதல் குழுவை அமைக்க முடியாது என்பதில் திட்டவட்டமாக இருக்கும் முதல்வர் தரப்பினார் ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடைபெற்றது. மேலும், வரும் 28 ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.