செவ்வாய், 13 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 மார்ச் 2021 (14:32 IST)

விசாயத்தை பற்றி ஒன்றும் அறியாத ஸ்டாலின் - எடப்பாடியார் காட்டம்!

விசாயத்தை பற்றி ஒன்றும் அறியாத ஸ்டாலின் - எடப்பாடியார் காட்டம்!
ஸ்டாலின் அவர்களே விவசாயியுடைய வரலாறு உங்களுக்கு எதுவும் தெரியாது என எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம். 

 
வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின் அவர்களுக்கு, வேளாண் சட்டம் பற்றி எதுவும் தெரியாது. தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்கின்ற முதல் அரசு அது அம்மாவின் அரசு தான். பஞ்சாபில் நிறைய இடைதரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கி வர்த்தர்களிடம் விற்பவர்கள். அதனால் அங்கு விவசாயிகள் போராடுகிறார்கள். பஞ்சாப் விவசாயிகளுக்காக தான் ஸ்டாலின் போராடுகிறார்.
 
நம்ம விவசாயி விளைவித்த பயிர்களுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும். இது தான் நம்முடைய நோக்கம். எப்படியாவது விவசாயிகளை குழப்ப வேண்டும் அதுல அப்படியே அவங்க ஓட்டை வாங்க வேண்டும். ஆட்சிக்கு வரணும் என்று கெட்ட எண்ணத்தில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின் என எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்.