எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக ஏற்று கொண்ட கூட்டணி கட்சி தலைவர்!
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக கூட்டணி கட்சி தலைவரான பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்று கொண்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், அருமை அண்ணன் மருத்துவர்,
ராமதாஸ் அவர்களின் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.