24 மணி நேரமும் வாட்சிங்லேயே இருக்கணும்! –ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிவுறுத்தல்

Prasanth Karthick| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (13:39 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குபெட்டி வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்க ஈபிஎஸ் – ஓபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பெட்டிகள் ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் மூன்றடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்குப்பெட்டி குளறுபடிகள் நடப்பதை தவிர்க்க அரசியல் கட்சிகளும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஈபிஎஸ் – ஓபிஎஸ் கூட்டாக அறிவுறுத்தல் செய்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களை இரவு பகல் பாராமல் 2 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :