நட்சத்திர தொகுதிகள்: எங்கெங்கு எத்தனை சதவீத வாக்குப்பதிவு?

Prasanth Karthick| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (12:24 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில் வாக்குப்பதிவு வீதம் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விவரங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 72.78 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 60.52% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் சில ஸ்டார் வேட்பாளர்களின் தொகுதி வாக்குப்பதிவு வீதம்..

துணை முதல்வர் - ஓ.பி.எஸ். - 73.65%, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் - கோவை தெற்கு - 60.72%, டி..டி.வி. தினகரன் - கோவில்பட்டி - 67.43%, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் - திருவொற்றியூர் - 65% என தெரியவந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :