செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 அக்டோபர் 2018 (10:56 IST)

அடம் பிடிக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் -எடப்பாடி , ஓ.பிஎஸ் அவசர ஆலோசனை

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சிலர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
 
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளனர். 
 
திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்திற்கு திரும்பி வர வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் நேற்று கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், அந்த அழைப்பை தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் நிராகரித்துவிட்டனர்.
 
இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி, ஓபிஎஸ், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் மற்றும் முனுசாமி ஆகியோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த கூட்டத்தில் உட்கட்சி விவகாரம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.