திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (12:28 IST)

ஓபிஎஸ், ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து! – நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்து வரும் நிலையில் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். கடந்த ஆண்டில் அதிமுகவில் சசிக்கலாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், ஆதரவாளர்கள் பலரை அதிமுக கட்சியை விட்டு நீக்கியது.

அந்தவகையில் அப்போது அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தியும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை கட்சியை விட்டு நீக்கியது நியாயமற்ற செயல் என புகழேந்தி சென்னை எம்.பி, எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.