செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (17:51 IST)

எதிர்பார்த்த விருப்பமனு இல்லை.. அவகாசத்தை நீட்டித்த எடப்பாடி பழனிசாமி..!

ADMK
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்க இன்று கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 
 
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. 
 
அந்த வகையில் அதிமுக, திமுக உட்பட அரசியல் கட்சிகள் விருப்ப மனுக்களை போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து பெற்று வரும் நிலையில் அதிமுக தரப்பில் விண்ணப்பம் செய்பவர்கள் இன்றுக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட எதிர்பார்த்த விருப்ப மனுக்கள் பெறப்படவில்லை என்பதை அடுத்து அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது விருப்ப மனுக்கள் பெறும் தேதியை நீடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிப்ரவரி 21 முதல் மார்ச் 1 வரை விருப்ப மனுக்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் 6 வரை கால அவகாசத்தை நீட்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
Edited by Mahendran