புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (08:33 IST)

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

சென்னையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை சவக்கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது. இதனையடுத்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சென்னை ராயப்பேட்டை துணை ஆணையர் இளங்கோவன் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இன்று அதிகாலை, சென்னை வியாசர்பாடி பகுதியில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரின் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். வழக்கு ஒன்றிற்காக போலீசார் கைது செய்ய முயன்றபோது, ரவுடி கள்ளத்துப்பாக்கியால் தாக்க முயன்றதால், என்கவுன்ட்டர் சம்பவம் நடந்தது என்று கூறப்படுகிறது.
 
சென்னயின் பிரபல தாதா  காக்கா தோப்பு பாலாஜி, பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர். இவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருந்ததுடன், பெட்ரோல் குண்டு வீசியது உள்ளிட்ட பல வழக்குகளிலும் போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva