22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!
சென்னை மற்றும் மதுரையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக வெப்பம் அதிகரித்து, மக்களை அவதியுற செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இதன் அடிப்படையில், சென்னையில் செப்டம்பரில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் ஏற்பட்டுள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
அவர் பகிர்ந்த தகவல் படி, 2002 ஆம் ஆண்டு செப்டம்பரில் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39.2 டிகிரி செல்சியஸாக இருந்தது. இப்போது சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 17, செவ்வாய்க்கிழமை அன்று, சென்னையில் மீண்டும் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னை மட்டுமின்றி மதுரையிலும் இதுவரை இல்லாத அளவுக்கு 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை செப்டம்பர் 17 அன்று பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva