செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (09:21 IST)

லேபிளுடன் காலி மது பாட்டிலுக்கு ரூ.10 - டாஸ்மாக் விளம்பரம்!!

இன்று முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை லேபிளுடன் திருப்பி வழங்கினால் ரூ.10 வழங்கப்படும் என அறிவிப்பு. 

 
தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில் 15 - 25% கடைகள் மலைப்பகுதிகளிலும் வனப்பகுதிகளிலும் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் குடித்துவிட்டு கண்ணாடி மது பாட்டில்களை ஆங்காங்கே விட்டு செல்வதால் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. 
 
இதனால் இப்பகுதிகளில் வாங்கப்படும் மதுபாட்டிலுடன் ரூ.10 சேர்த்து வசூலிக்கப்படும். மது குடித்து முடித்த பின்னர் ந்த பாட்டிலை லேபிளுடன் திரும்பி வழங்கினால் ரூ.10 திருப்பி வழங்கப்படும். பாட்டிலை திருப்பித்தராத நிலையில் வசூலிக்கப்பட்ட ரூ.10 டாஸ்மாக் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் பார்களில் கிடக்கும் மதுபாட்டில்களை பார் நடத்துனர்கள் அதில் ஒட்டப்பட்டுள்ள எக்சைஸ் ஸ்டிக்கர் தனியாக எடுத்து டாஸ்மாக் பணியாளரிடம் கொடுத்தால் அவர்களுக்கும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும்.