செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 3 மே 2022 (09:32 IST)

பொதுத்தேர்வு பள்ளிகளுக்கு தடையில்லா மின்சாரம்! – மின்வாரியம் உத்தரவு!

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் முழுவீச்சாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது மின்சார வாரியம் மின்பகிர்மான கோட்ட அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மின்தடை ஏற்படாதவாறு தங்கு தடையில்லா மின்சாரத்தை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்காக முன்னதாகவே பள்ளிகளுக்கு செல்லும் மின் இணைப்பு வழிகளை ஆய்வு செய்தல், அப்பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளை சோதித்தல், பழுது ஏற்பட்டால் சரிசெய்ய முன்கூட்டியே தயாராக இருத்தல், மாற்று வழிகளை தயார் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.