1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (17:05 IST)

ரூ.2000 மின்கட்டணம் வந்தால் இனிமேல் இதை செய்ய முடியாது: மின்சார வாரியம்

tneb
ரூபாய் 2000க்கும் அதிகமான மின் கட்டணம் வந்தால் இனி நேரடியாக மின்சார அலுவலகம் சென்று மின் கட்டணத்தை கட்ட முடியாது என்றும் ஆன்லைனில் மட்டுமே கட்ட முடியும் என்றும் மின்சார வாரியம் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தற்போது ரூபாய் 5000 மற்றும் அதற்கு மேல் மின் கட்டணம் உள்ளவர்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்தாமல் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தி வருகின்றனர். ரு.5000க்குள் மின்கட்டணம் உள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைனில் ஆகிய இரண்டின் வழியாகவும் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் தொகையை 2000 ஆக குறைக்க மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது. இதனை அடுத்து 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இனி மின்கட்டணம் வருபவர்கள் நேரடியாக அலுவலகம் சென்று மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran