வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (11:31 IST)

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் இ-வாகனங்களுக்கு சார்ஜிங் பாய்ண்ட்: 100 இடங்களில் அமைக்க திட்டம்..!

தமிழகத்தில் உள்ள 100 இடங்களில் இ-வாகனங்களுக்கு  மின்சார சார்ஜிங் பாயிண்ட் அமைக்க தமிழக மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும் நிலையில் சார்ஜிங் பாயிண்ட் நிலையங்களும் அதிகரித்து வருகின்றன என்பது தெரிந்ததே.
 
அந்த வகையில் தனியார் பலர் எலக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை வைத்திருக்கும் நிலையில் தமிழகம் மின்வாரியமே தற்போது சார்ஜிங் நிலையங்களை வைக்க திட்டமிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கோடை காலம் முடிந்ததும் சார்ஜிங் பாயிண்ட் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran