தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம்: மின்வாரியம் உத்தரவு!
தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிப்பதிற்கான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்க பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல் கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்துார் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெரு வீதிகளில், கேபிள் முலம் மின் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன!
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர் திருவிழாவில், தேரின் மேல் பகுதியில் மின்கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, மாநிலம் முழுவதும் முக்கிய கோயில்களில் தேர் செல்லும் பாதைகளில், மின் கம்பத்திற்கு மாற்றாக, தரை அடி கேபிள் வாயிலாக, மின் வினியோகம் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில், கோயம்புத்தூர் அருள்மிகு கோணியம்மன் திருக்கோவில், அவிநாசி அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம்.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருச்செங்கோடு அருள்மிகு, அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீகல்யாண
'வெங்கடரமண சுவாமி திருக்கோவில் மற்றும் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரீஸ்வரர் "திருக்கோவில், அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில், அருள்மிகு காஞ்சி
காமாட்சி அம்மன் திருக்கோவில் ஆகிய திருத்தலங்களிலுள்ள தேரோடும் பாதைகளில் மேலே செல்லும் மின்கம்பிகள் அனைத்தும் புதைவடத்தடங்களாக
மாற்றியமைக்கப்படும்.
இத்திருத்தலங்களில் நடைபெறும் தேரோட்டத்தின் போது பல்வேறு, பகுதிகளில் ஒருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதால், இவ்வாறு மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைப்பதன் மூலம் பொது, மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதுடன், மின் விபத்துக்களும் முற்றிலும் தடுக்கப்படும்."
Edited by Siva