திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (18:38 IST)

தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்க்கும் வழக்கு: தங்களையும் இணைக்க திமுக மனு

rs bharathi
தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்க்கும் வழக்கில் தங்களையும் சேர்த்துக் கொள்ளுமாறு திமுக தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பாஜகவின் அஸ்வினி என்பவர் தொடர்ந்த தேர்தலில் இலவச திட்டங்களை எதிர்ப்பும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் தேர்தலில் இலவசத் திட்டங்களை எதிர்க்கும் வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைக்க திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் 
 
மத்திய அரசு ஏற்கனவே வெளிநாட்டு கம்பெனிகளுக்கு வரிச்சலுகைகள் வழங்குவதையும் இந்த மனுவில் திமுக சுட்டிக்காட்டி உள்ளது என்பதும் செல்வாக்குள்ள தொழிலதிபர்கள் செலுத்தாத வங்கிகடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது என்பதையும் திமுக இந்த மனுவில் சுட்டிக்காட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது