வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (18:34 IST)

இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: டிடி எடுத்து அனுப்பினார் ஓபிஎஸ்

OPS
கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடும் பொருளாதார சிக்கலில் இருந்து வரும் நிலையில் இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகிறது 
குறிப்பாக தமிழ்நாடு அரசின் சார்பில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தனது சார்பில் 50 லட்ச ரூபாய் இலங்கைக்கு நிதி உதவி செய்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாடு அரசின் சார்பில் இலங்கை நாட்டிற்கு நிதி உதவி அளிக்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருந்தார். அப்போது எனது சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தேன்.
 
இந்த நிலையில் எனது மகன் ரவீந்திரநாத் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 25 லட்சத்திற்கு டிடி, எனது இளைய மகன் ஜெயபிரதீப் வங்கி கணக்கில் இருந்து 25 லட்சத்திற்கு டிடி என மொத்தம் 50 லட்சத்திற்கு டிடி எட்டுத்து அனுப்பி உள்ளேன் இதனை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.