1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2024 (12:03 IST)

10,000 பேருந்துகள் எங்கே? தேர்தல் நாளன்று பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதி..!

bus stand
தேர்தலுக்கு வாக்களிக்க வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதியாக 10,000 பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசின் போக்குவரத்து துறை கூறியிருந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பலர் பேருந்துகள் கிடைக்காமல் அவஸ்தை பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று வாக்களிக்க வெளியூர் செல்ல முயன்ற பயணிகளுக்கு போதிய பேருந்துகள் கிடைக்கவில்லை என்றும் இதனால் பொதுமக்கள் போக்குவரத்து ஊழியர்களிடம் பல இடங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இதற்கு தொழிற்சங்கத்தினர் காரணம் கூறிய போது ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்து கழகங்களில் காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் அதனால் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கவில்லை என்றும் கூறினர்

 50 சதவீதத்திற்கும் அதிகமாக பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டாலும் சில வழித்தடங்களில் பேருந்துகள் பற்றாக்குறை இருந்ததாக மாநகர போக்குவரத்து ஊழியர்களை ஒப்புக்கொண்டதுள்ளதாகவும் நேற்று பொதுமக்கள் கடும் அவஸ்தை அடைந்தது உண்மைதான் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran