1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (13:23 IST)

தமிழகத்தில் மொத்தம் எத்தனை வாக்காளர்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன என்பதும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தற்போது தயாராகி வருகிறது. சற்று முன் வெளியான தகவலின் படி தமிழகத்தில் மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர் என்பதும் இதில் ஆண் வாக்காளர்கள் 3,01,12,370 என்பதும் பெண் வாக்காளர்கள் 3,09,25,603 என்பதும் மூன்றாம் பாலினத்தவர் 6,385 என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி சோழிங்கநல்லூர் என்றும் இந்த தொகுதியில் மொத்தம் 6,55,366 வாக்காளர்கள் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அதேபோல் தமிழகத்தில் குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி கீழ்வேலூர் என்றும் இந்த தொகுதியில் 1,73,107 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது